டெல்லி கலவரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் - மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதும் குற்றச்சாட்டு

Sep 24 2020 12:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரம் தொடர்பான குற்றப்பத்திரிக்‍கையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. சல்மான் குர்ஷித், மூத்த வழக்‍கறிஞர் திரு. பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

டெல்லியின் ஜாபராபாத், சீலம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும், கடந்த பிப்ரவரி மாதம் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் சி.ஏ.ஏ., ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில், தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட சுமார் 40 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தக் கலவரம் தொடர்பாக வழக்‍குப்பதிவு செய்த டெல்லி போலீஸார், சுமார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்‍கையை டெல்லி நீதிமன்றத்தில் தாக்‍கல் செய்தனர். இவ்வழக்‍கில், ஆம் ஆத்மி கவுன்சிலர் திரு. தாஹிர் உசேன், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்‍கைக்‍கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டெல்லி கலவர வழக்‍கில், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. சல்மான் குர்ஷித், மூத்த வழக்‍கறிஞர் திரு. பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்‍கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00