லடாக்‍கில் நீடித்துவரும் எல்லைப் பிரச்னை தொடர்பாக 6வது முறையாக கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை - மே மாதத்தில் இருந்த நிலைக்கு சீனா திரும்பிச் செல்ல இந்தியா வலியுறுத்தல்

Sep 22 2020 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
லடாக்‍கில் நீடித்துவரும் எல்லைப் பிரச்னை தொடர்பாக, 6வது முறையாக கமாண்டர்கள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மே மாதத்தில் இருந்த நிலைக்கு சீனா திரும்பிச் செல்ல வேண்டுமென, இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

லடாக்‍கில் சீனத் துருப்புகள் அத்துமீறி ஊடுருவியதைத் தொடர்ந்து, இந்திய-சீன ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்‍க, தொடர்ந்து ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 6வது முறையாக, கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும், இருதரப்புக்‍கும் இடையிலான தகவல் தொடர்பை துண்டிக்‍காமல் பார்த்துக்‍கொள்ள வேண்டும் என்றும், மேலும் ஆத்திரமூட்டும் நடவடிக்‍கைகளில் ஈடுபடக்‍கூடாது என்றும் தெரிவிக்‍கப்பட்டது. அப்போது, கடந்த மே மாதம் 20-ம் தேதிக்‍கு முன்பிருந்த நிலைக்‍கு சீனத்துருப்புகள் திரும்பிச் செல்ல வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பதிலுக்‍கு, தெற்கு Pangong-Tso ஏரியின் தென்பகுதியில் இருந்து இந்தியத் துருப்புகள் பின்வாங்க வேண்டுமென சீனத்தரப்பில் தெரிவிக்‍கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00