எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறி உண்ணாவிரதம் தொடங்கினார் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் - டெல்லி அரசியலில் பரபரப்பு

Sep 22 2020 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநிலங்களவையில் வேளாண் மசோதாவுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்‍கட்சிகள் நடந்துகொண்ட விதம் தன்னை அவமதிக்‍கும் வகையில் இருந்ததாகக்‍ கூறி, துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மாநிலங்களவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டபோது எதிர்க்‍கட்சி உறுப்பினர்கள் நடந்துகொண்டவிதம் தம்மை அவமதிக்‍கும் வகையில் இருந்ததாக, அவைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடுவுக்‍கு துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் கடிதம் எழுதியுள்ளார். எனவே, இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த திரு. ஹரிவன்ஷ், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே, தன்னை அவமதித்தவர்களுக்கு தேநீர் வழங்க திரு. ஹரிவன்ஷ் முன்வந்தது அவரது மகத்துவத்தை காட்டுவதாக பிரதமர் திரு. மோதி பாராட்டு தெரிவித்துள்ளார். மாநிலங்களவை துணை தலைவர் திரு.ஹரிவன்ஷை வாழ்த்துவதில் நாட்டு மக்களுடன் தாம் இணைவதாக அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00