பெங்களூரு கலவரத்தை அடுத்து நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு - சம்பவம் நிகழ்ந்த பகுதியில் ஊரடங்கு அமலானதால் பதற்றம் நீடிப்பு

Aug 12 2020 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெங்களூருவில் உள்ள புலிகேசி நகரில் நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து, பெங்களூரு நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திரு.சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், சமூக வலைதளத்தில், ஒரு மதம் குறித்த சர்ச்சை பதிவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, புலிகேசி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ., வீட்டின் மீது ஒரு கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அச்சமடைந்த எம்.எல்.ஏ.வும், நவீனும், அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு சென்றனர்.

இதையறிந்த வன்முறை கும்பல் காவல் நிலையத்துக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். காவல்துறையினர் உட்பட 60 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, சம்பவத்திற்கு காரணமான நவீன் உட்பட 110 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் திரு.கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக, பெங்களூரு நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் D.J halli மற்றும் K.G halli காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00