தமிழகம் உள்ளிட்ட கொரோனா தொற்று அதிகமுள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு

Aug 11 2020 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு உள்பட கொரோனா அதிகம் பாதித்த 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோதி, இன்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு.நரேந்திர மோதி அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கொரோனா அதிகம் பாதித்த மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி, உத்தரபிரதேசம், மேற்குவங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் உள்பட 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோதி, மீண்டும் இன்று காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி, மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி முதல்வர் மம்தா பானர்ஜி,, பஞ்சாப் முதல்வர் திரு. அமரீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் திரு. சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் திரு. விஜய் ரூபானி, மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரே, பீஹார் முதல்வர் திரு. நிதிஷ்குமார் மற்றும் தமிழக முதலமைச்சர் பங்கேற்றனர். கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கலந்துரையாடினார்.

இந்தக்‍ கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்துக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி தேவை என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. கொரோனா பி.சி.ஆர் சோதனைக்காக 50 சதவீத தொகையை பி.எம்.கேர் நிதியில் இருந்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00