ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்தும், கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் அதிரடி நீக்‍கம் - காங்கிரஸ் மேலிடம் நடவடிக்‍கை

Jul 14 2020 2:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்தும், கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட்டை காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக நீக்‍கியுள்ளது.

ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சரான திரு. சச்சின் பைலட், முதலமைச்சர் திரு. அசோக்‍ கெலாட்டுடன் ஏற்பட்ட அதிருப்தியால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்‍கள் சிலருடன் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின.

இந்த பரபரப்பான சூழலில் இப்பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், முதலமைச்சர் அசோக்‍ கெலாட் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில் அசோக் கெலாட்டுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில காங்கிரஸ் சட்டமன்றகுழு கூட்டம் ஜெய்பூரில் இன்று மீண்டும் நடைபெற்றது. முதலமைச்சர் அசோக்‍ கெலாட் தலைமையில் நடைபெற்ற இக்‍கூட்டத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்‍கள் 102 பேர் கலந்து கொண்டனர். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இக்‍கூட்டத்தை புறக்‍கணித்தனர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்தும், கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட்டை காங்கிரஸ் மேலிடம் அதிரடியாக நீக்‍கியுள்ளது.

ஆட்சியைக்‍ காப்பாற்றிக்‍ கொள்ள, சச்சின் பைலட்டை காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தைக்‍கு அழைத்திருந்தது. இதற்கு பணியாததால் சச்சின் பைலட்டை காங்கிரஸ் அதிரடியாக நீக்‍கியுள்ளது.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலக்‍ காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கோவிந்த் சிங்கை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00