நிரவ் மோடியின் 329 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

Jul 9 2020 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோடிய, வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான, 330 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பினர். ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிரவ் மோடி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் பிடிபட்டார். அவரை கைது செய்த பிரிட்டன் போலீசார், வான்ட்ஸ்வொர்த் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, அவரை நாடு கடத்தும் முயற்சியில், இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள, வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்தாண்டு டிசம்பர் 5ம் தேதி நிரவ் மோடி, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 8 ம் தேதி நிரவ் மோடியின் சொத்துக்களை ஒரு மாதத்திற்குள் பறிமுதல் செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இதன் அடிப்படையில் மும்பை வோர்லியில் உள்ள சமுத் மஹால், கடற்கரை பண்ணை வீடு மற்றும் அலிபாக்கில் உள்ள நிலம், உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது வரை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், நிரவ் மோடிக்கு சொந்தமான 2 ஆயிரத்து 348 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00