கொரோனாவால் மோசமாக பாதிக்‍கப்பட்ட நாடுகள் பட்டியல் - 3-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவை நெருங்குகிறது இந்தியா

Jul 5 2020 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக அளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்‍கப்பட்ட நாடுகளின் பட்டியலில், 3-ம் இடத்தில் உள்ள ரஷ்யாவை இந்தியா நெருங்கியுள்ளது. இரு நாடுகளுக்‍கும் இடையே உள்ள எண்ணிக்‍கை மிகவும் குறைந்துள்ளது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. சர்வதேச அளவில் சுமார் ஒரு கோடியே 13 லட்சம் மக்‍கள் வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 33 ஆயிரத்துக்‍கும் அதிகமான மக்‍கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் மோசமாக பாதிக்‍கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்‍கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில், 29 லட்சத்து 35 ஆயிரத்து 770 பேருக்‍கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2-ம் இடத்தில் உள்ள ப்ரசிலில், 15 லட்சத்து 78 ஆயிரத்து 376 பேருக்‍கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 லட்சத்து 74 ஆயிரத்து 515 பாதிப்புகளுடன், ரஷ்யா 3-ம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 904 பேருக்‍கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்‍கையில், 4-ம் இடத்தில் இருக்‍கும் இந்தியா, 3-ம் இடத்தில் உள்ள ரஷ்யாவை நெருங்கி உள்ளது. இரு நாடுகள் இடையே உள்ள எண்ணிக்‍கை இடைவெளி வெறும் 611 என்ற அளவில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00