புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி - கிரண்பேடியின் உத்தரவை திரும்பப் பெற்றது

Jun 4 2020 2:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மாநில அரசு கோரியபடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.கொரோனா காரணமாக பணத்திற்கு பதிலாக அரிசி வழங்கப் படுவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு இன்றி மாதந்தோறும் இலவச அரிசி வழங்க வேண்டும் என முதலமைச்சர் திரு.நாரயணசாமி வலியுறுத்தியிருந்த நிலையில், இலவச அரிசுக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஏற்று, புதுவையில் அரிசிக்கு பதில் பணம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டது.

மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து முதலமைச்சர் திரு. நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. சி.வி.கார்த்திகேயேன், குடியரசு தலைவர் அறிவுறுத்தல்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அதற்கு புதுச்சேரி அரசு கட்டுப்பட வேண்டும் எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் திரு. நாராயணசாமி மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி திரு.ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி திரு.செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது கொரோனா பரவல் காரணமாக 3 மாதங்களுக்கு அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருக்கும் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00