மத்திய நிதியமைச்சர் தலைமையில் டெல்லியில் இன்று நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி கழக ஆலோசனை கூட்டம் - நாட்டின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்க திட்டம்

May 28 2020 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆலோசிக்‍க, மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில், நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி கழகத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவந்த சூழலில், கொரோனா ஊரடங்கால் அது மேலும் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. சுயசார்பு இந்தியா என்ற பெயரில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் அறிவிக்‍கப்பட்டன. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில், நிதி ஸ்திரத்தன்மை கண்காணிப்பு மற்றும் வளர்ச்சி கழகத்தின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக நடைபெறும் இக்‍கூட்டத்தில், ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்திகாந்த தாஸ், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையம், காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம், ஓய்வூதிய நிதியம் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் நிதித்துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00