தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்துடன் விளையாடும் குழந்தை - பசிக்கொடுமையோடு வெயிலும் வாட்டியதால் உயிரிழந்த இளம்பெண்

May 27 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பீகார் சென்ற ரயிலில் பயணித்த இளம் பெண், பட்டினி மற்றும் அதீத வெப்பம் காரணமாக உயிரிழந்த நிலையில், அவர் இறந்தது தெரியாமல் சடலத்துடன் அவரது குழந்தை விளையாடிய காட்சி காண்போர் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளது.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால், புலம்பெயர் தொழிலாளர்கள், ஏராளமான துயரங்களை சந்தித்து வருகின்றனர். குஜராத்தில் பணிபுரிந்து வந்த பீகாரை சேர்ந்த 23 வயது பெண், சிறப்பு ரயிலில் தனது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே உரிய உணவின்றி தவித்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயிலில் ஏறியதில் இருந்து உணவின்றி தவித்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ரயில் பயணத்தின் போது கடும் வெப்பம் நிலவியதால், நேற்று பீகார் மாநிலத்தின் முசாஃபர்பூர் நகரை அடைவதற்கு முன்பாக அப்பெண் நிலைகுலைந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அப்பெண்ணின் உடல் துணியால் போர்த்தப்பட்டு ரயில்வே மேடையில் கிடத்தப்பட்டுள்ளது. தாய் உயிரிழந்தது தெரியாமல், அவரது குழந்தை சடலத்துடன் விளையாடும் காட்சி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00