கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்

May 24 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்‍கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடங்கவுள்ளது. பயணிகளுக்கான சேவைகளை வழங்க விமான நிலையங்கள் தயாராகி வருகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்‍கையாக வரும் 31-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிக்‍கப்பட்டுள்ள நிலையில், வரும் 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. படிப்படியாக விமான சேவை முழு அளவுக்கு விரிவு படுத்தப்படும் என்று தெரிவித்த விமானப் போக்‍குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் சிங்பூரி, தயார் நிலையில் இருக்குமாறு விமான நிறுவனங்களுக்‍கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து, ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடங்கிறது. பயணிகளை எதிர்கொள்ள விமான நிலையங்கள் தயாராகி வருகின்றன. பயணிகள் அனைவருமே ஆரோக்‍கிய சேது செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்‍கம் செய்யவும், வழக்‍கத்தைவிட 2 மணி நேரம் முன்னதாக விமான நிலையம் வந்துவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பயணிகளும், விமான நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், கூடுதல் வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், தங்களின் விவரங்களை TNepass இணையத்தில் பதிவு செய்வது கட்டாயம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00