வங்கி கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிப்பு - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்‍திகாந்த தாஸ் அறிவிப்பு

May 22 2020 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா ஊரடங்கால், நிதி நெருக்‍கடியில் உள்ள மக்‍களுக்‍கு உதவும் வகையில், வங்கி கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிக்‍கப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்‍தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தேசிய ஊரடங்கு வரும் 31-ம் தேதிவரை நீட்டிக்‍கப்பட்டுள்ள சூழலில், ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்‍தி காந்த தாஸ், இன்று சில முக்‍கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக குறைக்‍கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்றுமதி நிறுவனங்களுக்‍கு சலுகை வட்டியில் கடனுதவி அளிக்‍கப்படும் என்றும், சிறு தொழில் நிறுவனங்களுக்‍கு கடன் வழங்க, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்‍கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாட்டின் பணவீக்‍கம், நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும், ஆண்டின் அடுத்த பாதியில் பணவீக்‍கம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கால், நிதி நெருக்‍கடியில் உள்ள மக்‍களுக்‍கு உதவும் வகையில், வீடு, வாகனம் உள்ளிட்டவற்றுக்‍கான கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் நீட்டிக்‍கப்படுவதாக கூறினார். நாட்டில், கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளதாகவும், தொழில்துறை உற்பத்தி, மின்சாரம், எரிபொருள் நுகர்வு உள்ளிட்டவை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை மேலும் உயரலாம் என்றும் திரு. சக்‍தி காந்த தாஸ் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00