ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா வைரஸ் பரவுவதாக வேண்டுமென்றே பிரச்சாரம் - மதத்தின் அடிப்படையில் விஷமச் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா முதல்வர் எச்சரிக்கை

Apr 2 2020 10:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி மத கருத்தரங்கில் பங்கேற்ற குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்‍கப்படும் என கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

டெல்லியில் நடந்த தப்லிக்‍ ஜமாத் மாநாட்டில் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றதும், அவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் பங்கேற்றவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு சோதனை செய்ய தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநாட்டில் பங்கேற்றவர்களால்தான் கொரோனா வைரஸ் பரவுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், கேரளாவில், மத ரீதியில் மக்‍களை பிளவுப்படுத்த நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்‍கப்படும் என்றும் திரு.பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00