கொரோனா வைரஸ் பாதிப்பால் மும்பை தாராவியில் ஒருவர் உயிரிழப்பு - நாடு முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு - 2,094 பேருக்கு பாதிப்பு

Apr 2 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 4 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹரியானாவில் 66 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், இதுவரை 57 பேர் பலியாகியுள்ளனர். 2 ஆயிரத்து 94 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்‌டை‌ நாடான சீனாவின், வூகான் நகரில் பரவிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நாட்டில், 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இந்நி‌லையில், ஹரியானாவில் கோவிட்-19 பாதிப்பிற்கு Ambala Cantonment பகுதியைச் சேர்ந்த 66 வயது நபர் உயிரிழந்தார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் கொரோனாவுக்‍கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 43 பேர் கொரோனா தொற்றால் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில், 56 வயது நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றிரவு உயிரிழந்தார். அவருடன் தொடர்பிலிருந்தவர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அம்மாநிலத்தில், 338 பேர் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை, கொரோனா வைரஸ் தொற்றால், 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில், 265 பேரும், தமிழகத்தில், 234 பேரும், டெல்லியில், 152 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 171 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00