ஏப்ரல் மாத மத்தியில், நாடு முழுவதும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல் - இந்திய ராணுவம் மறுப்பு

Mar 30 2020 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, வரும் ஏப்ரல் மாத மத்தியில், நாடு முழுவதும் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்களை, இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

உலக நாடுகள் போர்க்கால அடிப்படையில், Covid-19 வைரஸை எதிர்த்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என மத்திய அரசும், மாநில அரசுகளும் திரும்பத் திரும்பக் கூறியும், இதற்கு பொதுமக்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், Covid-19 வைரஸ் தாக்குதலை சமாளிக்க, ஏப்ரல் மாத மத்தியில் இருந்து நாடு முழுவதும் நெருக்கடி நிலையைப் பிறப்பிக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இது, முற்றிலும் பொய்யான தகவல் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியாகியுள்ள பதிவில், ஏப்ரல் மாத மத்தியில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்படக் கூடும் என்றும்,கொரோனா வைரஸ் எதிர்ப்புப் பணியில் சிவில் நிர்வாகத்திற்கு உறுதுணையாக ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர், நாட்டுநலப் பணியாளர்கள் மற்றும் பிரபலங்களை பயன்படுத்திடவும் சமூக ஊடகங்களில் பொய்யான, காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய செய்தியை சிலர் பரப்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில், தற்போது அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை, மத்திய அமைச்சரவைச் செயலாளர் திரு. Rajiv Gauba மறுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00