கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு : ராகுல்காந்தி

Mar 30 2020 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், மத்திய அரசுக்‍கு, காங்கிரஸ், முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ள திரு. ராகுல்காந்தி, அதேநேரம், வளர்ந்த நாடுகளில் அமல்படுத்துவது போன்ற முழு ஊரடங்கு இந்தியாவிற்கு சரியாக இருக்‍காது என்று கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் திரு. மோதிக்‍கு திரு. ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள திடீர் முடக்கம், மக்கள் இடையே பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது - இந்தியாவின் தனிப்பட்ட சூழலை புரிந்து கொள்வது சிக்கலானது - ஊரடங்கிற்குபதிலாக வேறுவிதமான வழிகளை பின்பற்ற வேண்டும் - நாட்டில் தினக்கூலியை சார்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் - கொரோனாவை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஒட்டு மொத்த முடக்கத்தால், பொருளாதார நடவடிக்கைகள் முழுவதும் முடங்கியுள்ளதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் மிக நீண்ட நடை பயணம் மேற்கொண்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் - இவர்களுக்கு, எளிதில் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது - பாதிக்‍கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்‍கு, இருப்பிடம் அளித்து, அடுத்த சில மாதங்களை சமாளிக்க, அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்த வேண்டும் என்றும் நமது மக்களின் சிக்கலான உண்மை நிலவரத்தை கருத்தில் கொண்டு, பொருத்தமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் திரு. ராகுல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00