கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு : டெல்லியில் அடியோடு குறைந்த காற்று மாசு அளவு

Mar 29 2020 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் காரணமாக, அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் டெல்லியில் காற்று மாசு அளவு அடியோடு குறைந்துவிட்டது.

அண்மைக்காலமாக, தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமாக இருந்தது. அண்டை மாநிலங்களில், வேளாண் கழிவுகளை எரிப்பதால் ஏற்பட்ட புகை, டெல்லியில் நிலவிய பனியுடன் சேர்ந்து, காற்றின் தூய்மை மிகவும் மோசமடைந்தது. 5 அடி தூரத்தில் உள்ள பொருளைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு, பனி-புகை மூட்டம் நிலவியது.

இந்நிலையில், சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக, காற்று மாசு அடியோடு குறைந்து, வானம் தெளிவாகக் காணப்பட்டது. தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிப்பட்ட நைட்ரஜன் டை ஆக்ஸைடு அளவும் மிக வெகுவாகக் குறைந்துவிட்டது. டெல்லி, குருக்ராம், ஃபரிதாபாத், நொய்டா, காஸியாபாத் ஆகிய இடங்களில், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00