கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நள்ளிரவு முதல் 21 நாட்களுக்‍கு நாடு தழுவிய ஊரடங்கு அமல் - வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோதி அறிவுறுத்தல்

Mar 25 2020 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் கட்டாய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டுமென்று பிரதமர் மோதி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது மட்டும்தான் மக்களை காப்பாற்றும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்க வேண்டிய கடும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு 2-வது முறையாக உரையாற்றினார். அப்போது, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒவ்வொரு இந்தியரும் தாமாக முன்வந்து மக்கள் ஊரடங்கை வெற்றி பெறச் செய்ததாக தெரிவித்த அவர், மக்கள் மேலும் தீவிரமாகவும், உறுதியாகவும் கொரோனாவை எதிர்த்து போரிட வேண்டுமென கேட்டுக் கொண்டார். உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு அனைவருக்கும் தெரியுமென குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட நாடுகள் அவர்களின் ஆற்றல் மற்றும் வளங்களை முழுமையாக பயன்படுத்தியும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சமூக அளவில் ஒவ்வொருவரும் விலகி இருப்பது மட்டுமே தீர்வு என்பதை கடந்த 2 மாதங்களில் அறிந்து கொண்டுள்ளோம் என்றும், கொரோனாத் தொற்று சங்கிலியை முறிப்பதற்கு இது மட்டும் தீர்வு என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தனித்திருக்க வேண்டுமென்றும், இந்த கட்டுப்பாட்டை மீறினால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், சிலரின் அலட்சியத்தால் அவர்களின் குழந்தைகளுக்கும், தாய் தந்தையருக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார். கடந்த 2 நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இன்று மிக முக்கிய முடிவாக நள்ளிரவு முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோதி தெரிவித்தார். இந்த ஊரடங்கின்போது, ஒவ்வொரு இந்தியரும் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்படுகிறது - மக்கள் மிகக்கடுமையாக இந்த ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார இழப்பு மிகப்பெரியதாகும் - ஒவ்வொரு இந்தியரை காப்பாற்றவும், இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் - இந்த ஊரடங்கு அடுத்த 21 நாட்களுக்கு தொடரும் என்றும் தெரிவித்தார். இந்த ஊரடங்கை மீறினால் ஒவ்வொரு குடும்பமும் 21 ஆண்டுகள் பாதிக்கப்படும் - இதனை செய்ய முடியாவிட்டால் பேரழிவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். வீட்டை விட்டு வெளியேறினால் கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் - கொரோனா தொற்று வெளிப்பட பல நாட்கள் ஆகலாம் ஆனால் அதற்குள் கொரோனா மற்றவர்களுக்கு பரவி விடும் - ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 67 நாட்களில் ஒரு லட்சம் பேரை பாதிக்கும் - ஆனால் அடுத்த 11 நாளிலேயே மேலும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் - அடுத்த 4 நாளில் மேலும் 3 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் - சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஈரான், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இதுதான் நடந்தது என பிரதமர் மோதி தெரிவித்தார்.

சுகாதார அமைப்பு மிகவும் தலைசிறந்ததாக கருதப்பட்ட இத்தாலியிலும், அமெரிக்காவிலும் நிலைமை மோசமாகி விட்டதை குறிப்பிட்ட அவர், இன்றிலிருந்து நாம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் கொரோனாவிலிருந்து நம்மை காப்பாற்றுவதற்கான ஒரே வழி - இதனை பொறுமையுடனும் கட்டுப்பாடுடனும்,உறுதியுடனும் கடைபிடிக்க வேண்டும் என்றார். மக்களைக் காப்பாற்ற தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்காக துப்புரவு பணியாளர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் - கொரோனா வைரஸ் தொடர்பாக சரியான தகவல்களை மக்களுக்கு அளிக்க இரவு பகலாக பாடுபடும் ஊடகத் துறையினரின் சேவையை எண்ணிப்பார்க்க வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். நிலைமையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன - இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் துயரை துடைக்க பலர் முன்வந்துள்ளனர் - கொரோனா வைரஸ் தடுப்புக்காக மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல் எவ்வித மருந்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்த பிரதமர் மோதி, 21 நாட்கள் என்பது நீண்ட காலம் தான். ஆனால் நாட்டு மக்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் இது மிக மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00