டெல்லி கலவரம் தொடர்பாக சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரும் வழக்‍கு : மத்திய அரசு, டெல்லி அரசு, காவல்துறை பதிலளிக்‍க நோட்டீஸ்

Feb 28 2020 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி கலவரம் தொடர்பாக திருமதி. சோனியா, திரு. ராகுல், திரு. ஓவைசி உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரி தாக்‍கல் செய்யப்படுள்ள மனுக்‍கள் குறித்து பதிலளிக்‍க, மத்திய அரசு, டெல்லி அரசு மற்றும் காவல்துறைக்‍கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி வன்முறைச் சம்பவங்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான பேச்சே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஓவைசி, அவரது சகோதரர் அக்பரூதின் ஒவைசி உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரி, இந்து சேனா என்ற அமைப்பு சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. மேலும், கலவரம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக, திருமதி. சோனியா காந்தி, திரு. ராகுல் காந்தி, திருமதி. பிரியங்கா வதேரா உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்ய வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்‍கல் செய்யப்பட்டது.

இந்த வழக்‍குகள் இன்று விசாரணைக்‍கு வந்தன. அப்போது, திருமதி. சோனியா, திரு. ராகுல், திரு. ஓவைசி உள்ளிட்டோர் மீது வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரி தாக்‍கல் செய்யப்படுள்ள மனுக்‍கள் குறித்து பதிலளிக்‍க, மத்திய அரசு, டெல்லி அரசு மற்றும் காவல்துறைக்‍கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்‍கு விசாரரணை வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00