அமெரிக்‍காவில் முதலீடு செய்ய வருமாறு இந்திய தொழிலதிபர்களுக்‍கு அழைப்பு - வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் தொழில்துறையினர் முக்‍கிய பங்கு வகிக்‍கவேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தல்

Feb 25 2020 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில் முதலீடு செய்ய வரும்படி, இந்திய தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் தொழில் துறையினருக்கு முக்கிய பங்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ​டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில், இந்திய தொழில் துறையினருடன் கலந்துரையாடினார். இதில், ரிலையன்ஸ் குழுமத் த‌லைவர் திரு. முகேஷ் அம்பானி, டாடா குழுமத் தலைவர் திரு. சந்திரசேகரன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் முதலீடு செய்ய வரும்படி இந்திய தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்காவில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி காலம் குறைக்கப்படும் என்று தெரிவித்த அவர், அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே தமது நோக்கம் என்றும், வேலைவாய்ப்பு அதிகரிப்பதில் தொழில் துறையினருக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் குறித்து, சீன அதிபர் ஜிங்பிங்குடன் பேசியதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக, சீன அதிபர் தெரிவித்ததாகவும், தான் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், பங்குச்சந்தைகள் ஏற்றமடையும் என்றும் கூறினார்.

அமெரிக்காவிடமிருந்து, 21,500 கோடி ரூபாய் மதிப்பில், ஹெலிகாப்டர் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா வாங்க உள்ளது தமக்கு பெருமையாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00