சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மீண்டும் பயங்கர மோதல் - இருதரப்பினரும் கற்களால் தாக்கிக் கொண்டதால் பதற்றம்

Feb 25 2020 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியின் வட கிழக்கு பகுதியான பஜன்புரா சவுக் அருகே, மீண்டும் இரு தரப்பினர் கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால், பதற்றம் அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் பகுதி அருகே உள்ள மவுஜ்பூரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. அப்போது, இருதரப்பினர் ஒருவ‌ரையொருவர் மோதிக் கொண்டனர். மேலும், கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்தக்‍ கலவரத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் என்பவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 160-க்‍கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து, வடக்கு மற்றும் தெற்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஜன்புரா சவுக் அரு‍கே மீண்டும் இரு தரப்பினருக்கி‌டையே பயங்கர மோதல் வெடித்தது. கற்கள் மற்றும் கட்டைகளால், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில், பலர் காயமடைந்தனர். மோதலை தடுக்க ஏராளமான‍ போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வட கிழக்கு டெல்லியில் உள்ள மவுஜ்பூர், பிரம்மபுரி, கரவால் நகர், சந்த்பூர் ஆகிய இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00