மகாராஷ்ட்ர மாநிலத்தில் சாலையோர கிணற்றுக்குள் அரசுப் பேருந்து, ஆட்டோ விழுந்து கோர விபத்து : 20 பேர் பலி - 15-க்கும் மேற்பட்டோர் காயம்

Jan 29 2020 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், அரசு பேருந்தும், ஆட்டோவும் சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில், 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மகாராஷ்ட்ர மாநிலம் துலே மாவட்டத்தில் இருந்து நாசிக் மாவட்டம் கல்வான் நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக, எதிரே வந்த ஆட்டோவுடன் மோதிய வேகத்தில் பேருந்தும், ஆட்டோவும் சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தன. கிணற்றின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு இரு வாகனங்களும் உள்ளே விழுந்தன. இந்த கோர விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பயணிகள் உயிருக்குப் போராடினர். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார், தீயணைப்பு படையினருடன், கிராம மக்‍களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய பேருந்து, ஆட்டோ மீது மோதிய விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுபங்களுக்‍கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை மகாராஷ்ட்ர அரசு அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00