அமித்ஷாவின் பரிந்துரையின்படியே, ஐக்கிய ஜனதா தளத்தில் பிரசாந்த் கிஷோரை சேர்த்ததாக முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு - வேண்டுமானால், கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம் எனவும் கருத்து

Jan 28 2020 9:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பரிந்துரையின்படியே, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில், பிரசாந்த் கிஷோரை சேர்த்ததாகவும், வேண்டுமானால், அவர் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றும், அக்கட்சித் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான திரு. நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முதலமைச்சருமான திரு. நிதிஷ் குமாருக்கும், அக்கட்சியின் துணைத் தலைவரும், தேர்தல் திட்ட நிபுணருமான திரு.பிரசாந்த் கிஷோருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, பீகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரு. நிதிஷ் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பரிந்துரையின்படியே பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததாகவும், வேண்டுமானால் அவர் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் திட்ட நிபுணராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றுகிறார் என்றுக் குறிப்பிட்ட அவர், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கென்று, அடிப்படை சட்டத்திட்டங்கள் உள்ளன என்றும், அதை பிரசாந்த் கிஷோர் பின்பற்ற வேண்டும் என்றும், முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள திரு. பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமார் தெரிவித்துள்ள கருத்துக்‌கு, பீகார் வந்ததும் பதிலளிப்பதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00