பல்வேறு கோரிக்‍கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி வரும் 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் வேலைநிறுத்தம் : டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து முடிவு

Jan 28 2020 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி வரும் 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

20 சதவீத ஊதிய உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய பலன்களுக்கு வரி விலக்கு, வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை அமல்படுத்துதல், அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஒரே மாதிரியான பணி நேரத்தை அமல்படுத்துதல் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து டெல்லியில் மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை முதன்மை ஆணையர் தலைமையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிதியமைச்சக அதிகாரிகள், இந்திய வங்கியின் அசோசியேஷன் நிர்வாக தரப்பினர் மற்றும் தொழிற்சங்கத்தின் தரப்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி வரும் 31 மற்றும் 1ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்‍கப்படுகிறது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00