சீனாவில் வேகமாக பரவும் கரோனா வைரஸ் : தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை

Jan 21 2020 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கரோனா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறும் அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

சீனாவில் மீண்டும் பரவி வரும் கரோனா வைரஸால் நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சூடன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கரோனா வைரஸின் தாக்கம் குறித்து சுகாதாரத்துறை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நோயின் தாக்கம் குறித்தும், அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கரோனா வைரஸ் பாதிப்புடன் வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்கு வரும் சீனர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீன பயணிகளை தெர்மல் ஸ்கிரீன் மூலம் சோதனையிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00