ராஜீவ் காந்தி வழக்‍கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் - தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தின் தற்போதைய நிலவரம் குறித்து பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் உத்தரவு

Jan 21 2020 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில், தற்போதைய நிலை குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஓராண்டுக்கு மேல் ஆகியும் இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த வழக்கில், பெல்ட் வெடிகுண்டுக்கு பேரறிவாளன் பேட்டரி வழங்கியது தொடர்பாக சிபிஐ அதிகாரி தியாகராஜன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். பேரறிவாளனுக்கு ராஜீவ் கொலை வழக்கில் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்‍ கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின்போது சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் புதிய விவரங்கள் ஏதும் இல்லை என்றும், கூடுதல் விவரங்கள் அடங்கிய புதிய அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் புதிய தகவல்கள் ஏதும் இல்லை என நீதிபதிகள் மீண்டும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், 7 பேர் விடுதலை விவகாரத்தில், தற்போதைய நிலை குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00