நகுல் நடிக்கும் புதிய படத்தின் 'நிற்க அதற்குத் தக' முதல் போஸ்டர் வெளியீடு : கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் 'நிற்க அதற்கு தக' திரைப்படம்
Jun 8 2023 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகர் நகுல் நடித்துள்ள 'நிற்க அதற்கு தக' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரஜின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டி3' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி. இவர் தற்போது நடிகர் நகுலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்நிலையில் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'நிற்க அதற்கு தக' என படக்குழு தலைப்பு வைத்துள்ள நிலையில், இது தொடர்பான முதல் தோற்ற போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.