நடிகை மேகா ஆகாஷுக்கும் தமிழக அரசியல்வாதி மகனுக்கும் திருமணம்? : சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் திருமண தகவல் - மாப்பிள்ளை யார் என கேட்கும் நெட்டிசன்ஸ்
Jun 8 2023 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை மேகா ஆகாஷ், பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், டியர் மேகா ஆகிய படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷும் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரின் மகனும் நீண்ட நாள்களாகவே காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என தகவல் பரவி வருகிறது. மேகா ஆகாவின் மனம் கவர்ந்த மாப்பிள்ளை யார்? என ட்விட்டரில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.