விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தின் பெயர் "லியோ" என அறிவிப்பு - படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு
Feb 4 2023 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜய் நடிக்கும் 67ஆவது திரைப்படத்திற்கு லியோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில், ஜெயிலர் ரஜினியின் தோற்றத்தையும் மற்றும் நாகார்ஜூனா நடித்த கோஸ்ட் படத்தின் டீசர் வீடியோவையும் சுட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு, லோகேஷ் கனகராஜூடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றன. காஷ்மீரில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தளபதி 67 படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு லியோ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜோசப் விஜய் என்ற சர்ச்சை தற்போது சற்று ஓய்ந்துள்ள நிலையில், லியோ எனப் பெயர் சூட்டப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. அதேபோல், டைட்டில் புரோமோ வீடியோவும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த புரோமோ வீடியோவானது. தெலுங்கில் நாகார்ஜூனா நடித்த கோஸ்ட் படத்தின் டீசர் போல் உள்ளதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்து, பகிர்ந்து வருகின்றனர்.
நாகார்ஜூனா தனது எதிரிகளை கொல்வதற்காக கத்தியை தயார் செய்வது போல், விஜயும் கத்தி தயாரித்து எதிரிகளை எதிர்ப்பது போல் லியோ வீடியோவும் முடிகிறது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் கெட் அப்பையும், லியோ படக்குழு காப்பி செய்திருப்பதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். லியோ படத்தின் தொடக்கத்தில் காட்டப்படும் விஜயின் கெட்டப்பும், ஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப்பும் ஒரே மாதிரியாக இருக்கிறது என நெட்டிசன்கள் ஒற்றுமைப்படுத்தி விமர்சித்து வருகின்றனர்.
மேலும் லியோ படத்தின் புரோமோ, டேரி மில்க் சாக்லேட் விளம்பரத்தை நினைவுபடுத்துவதாகவும் பலர் பதிவு செய்து வருகின்றனர்.
லியோ படத்தின் டைட்டிலை கிண்டல் செய்யும் விதமாக, நீங்கள் வெறும் லியோவா, இல்ல சன்னி லியோவா என்று பதிவிட்டு வருகின்றனர். லியோ காப்பி நிறுவனத்தின் விளம்பர புகைப்படத்தையும் பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர். வீரபாகு பேக்கரி புகைப்படம் மற்றும் தெய்வத் திருமகன் படத்தில் விக்ரம் வேலை செய்யும் சாக்லேட் ஆலையையும் பதிவிட்டு, லியோ படத்தை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தூள் படத்தில் வரும் காமெடிக் காட்சியையும் சில நெட்டிசன்கள் தூசு தட்டி எடுத்து, லியோ படத் தலைப்பை, புழுதியில் போட்டு புரட்டி எடுக்கின்றனர்.