எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், ஒரு கிராம் 75 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் 119 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.