எழுத்தின் அளவு: அ+ அ- அ
வர்த்தகப் போரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சீன இறக்குமதிப் பொருட்களுக்கான வரியை 145-ல் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப் கடந்த 2-ம் தேதி முதல் பல நாடுகளுக்கும் பரஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தினார். இதிலிருந்து விலக்குப் பெறுவதற்காக 75-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தன. இதனால் அவர்களுக்கு 90 நாள் வரை வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ட்ரம்ப், பதிலுக்குப் பதில் வரி விதித்த சீனாவுக்கு வரியை தொடர்ந்து அதிகரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சீனாவிற்கு 245 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளார்.