வரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றுக்கொள்வதாக ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தன்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை என்றும், தனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என கேப்டன் டூபிளஸ்சி மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறியுள்ளதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார். மேலும், உடல் மற்றும் மனநலனில் முன்னேற்றம் ஏற்பட்டு, நடப்பு சீசனிலேயே மீண்டும் விளையாடுவேன் என்று நம்புவதாகவும் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day