தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பான் நாட்டில் நடைபெற்று வரும் 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று, சாதனை படைத்துள்ள தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வரும் 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து நம் தேசத்திற்கே பெருமை சேர்த்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது -

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து மென்மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day