சேப்பாக்கம் டெஸ்ட் - சதம் விளாசினார் அஸ்வின்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கதேசம் எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரவிச்சந்திர அஷ்வின் சதம் விளாசி அசத்தியுள்ளார். 

இந்தியா வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள், அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், பின்னர் களமிறங்கிய ரவிச்சந்திர அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திர அஷ்வின் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. இதில் ரவிந்திர ஜடேஜா 86 ரன்களுடனும், ரவிச்சந்திர அஷ்வின் 102 ரன்களுடனுடம் விளையாடி வருகின்றனர்.

Night
Day