விலையில்லா மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்தாத திமுக அரசு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராதாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராதாபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்‍காக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வருகை தந்தபோது, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்‍கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள், மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.


ராதாபுரம் பகுதியில் பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்‍கள் மற்றும் கழகத் தொண்டர்களிடையே புரட்சித்தாய் சின்னம்மா எழுச்சியுரை ஆற்றினார். 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி மலரும் என்று புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்தார். 

Night
Day