தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணாபுரம் ஊரணிப்பட்டி தெருவில் கடந்த 5 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், தெருவிளக்கு, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து மனு அளித்தும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் நித்யா விஜயகுமார் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய சுமூக பேச்சுவார்த்தையை அடுத்து கலைந்து சென்றனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...