ராமநாதபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டினம் காத்தான், பேராவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். 

இதேபோன்று ராமேஸ்வரத்தில் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. ராமநாதசுவாமி கோவில் வளாகம், வேர்க்கோடு, புதுரோடு, கெந்தமாதன பர்வதம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.  இதனால் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள், பொதுமக்கள் மழையில் நனைந்து அவதி அடைந்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைத்தனர். 

இதனிடையே தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசி, செங்கோட்டை, பண்பொழி, குற்றாலம், கணக்கப்பிள்ளை வலசை, சுரண்டை, பாவூர்சத்திரம், ஆய்க்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இந்த மழை காரணமாக அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

Night
Day