மீலாது நபி திருநாள் - புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடிடும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள மீலாது நபி திருநாள் வாழ்த்துச் செய்தியில், மனித குலத்திற்கான அற்புதமான வாழ்வியல் தத்துவங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்து காட்டிய அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளினை பெருமகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த மீலாது நபி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

"எந்த ஒரு செயலிலும், உணர்ச்சி வசப்படாத சகிப்புத்தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை, நல்ல எண்ணம் நடத்தையை பாதுகாக்கும், பசித்தவர்களுக்கு உணவளியுங்கள், சகோதரர்களாக வாழுங்கள், சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள், இறைவனின் உதவி ஒன்று சேர்ந்த மக்களின் மீது இருக்கும்" என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் உலகிற்கு அருளிய போதனைகளை அனைவரும் பின்பற்றி நடந்தால் வாழ்வில் ஏற்றம் பெறலாம் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.  

அன்பு இருந்தால்தான் பிறர்க்கு நாம் உதவ முடியும் என்பதனை உறுதியாக நம்பி அதன்படி வாழ்ந்தும் காட்டிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடிடும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது இனிய மீலாது நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day