மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்தியப்பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக இணையமைச்சர் எல்.முருகன் தேர்வாக உள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், 13 மாநிலங்களில் இருந்து தேர்வான 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை பதவிகளுக்கு வரும் 27 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது. இதற்கான, வேட்புமனுத்தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில், மத்தியப்பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கான மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்தது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் இருந்து எல்.முருகன், உமேஷ் நாத் மகாராஜா, மாயா மரோலியா, பன்சிலால் குஜார் மற்றும் ஒடிசா மாநிலத்தில் இருந்து மீண்டும் அஷ்வினி வைஷ்ணவ் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day