எழுத்தின் அளவு: அ+ அ- அ
கரூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் தளத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், பள்ளி முதல்வரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கரூரை அடுத்த ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் இரண்டாவது தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட சக மாணவர் ஒருவர் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில், படுகாயமடைந்த மாணவி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியாக விளையாட்டு சான்றிதழ் ஒன்று கிழிக்கப்பட்டதாகவும், அதற்கு தமது மகள்தான் காரணம் என ஆசிரியர் ஒருவர் கண்டித்ததால், மன உளைச்சல் அடைந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவியின் மருத்துவ அறிக்கை வெளியான பின்னரே, உடல்நிலை குறித்து தெரியவரும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.