மயிலாடுதுறை: விளம்பர திமுக அரசுக்கு எதிராக வருவாய் ஊழியர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய்துறை ஊழியர்கள், மயிலாடுதுறையில் பலூன்களை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 9-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்திலும் 3 நாட்களாக தொடர் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக இன்று, விளம்பர திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதை தெரியப்படுத்தும் விதமாக, பலூன்களை காற்றில் பறக்கவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Night
Day