தமிழகம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,640 சரிந்தது...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஆயிரத்து 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 70 ...
மயிலாடுதுறையில் மாநில அளவில் நடைபெற்ற சுவர் ஓவிய போட்டியில் இரு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி கால்களால் சுவரில் ஓவியம் வரைந்து அசத்தினார். டாக்டர் வரதாச்சாரியார் நகர பூங்காவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நெகிழி விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான சுவர் ஓவியப்போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் சுவர் ஓவியப்போட்டியில் பங்கேற்று விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர். இந்த போட்டியில் இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவி லட்சுமி, மஞ்சப்பையை பயன்படுத்துவது குறித்த ஓவியத்தை தனது இரண்டு கால்களால் வரைந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஆயிரத்து 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 70 ...
54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் பத்மபூஷண் நடிகர் அஜித்குமார்...இந்திய அளவி...