பேருந்தில் டிக்கெட் கேட்ட விவகாரம் தொடர்பாக காவலர் - நடத்துநர் இடையே சமரசம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே உண்டான பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணித்த காவலர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் அரசுப் பேருந்துகளை வளைத்து வளைத்து அபராதம் விதித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளரும் போக்குவரத்துத்துறை செயலாளரும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில் போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Night
Day