புதுக்கோட்டை : காரை மறித்து அரிவாள்வெட்டு, 13 சவரன் வழிப்பறி செய்தவர்களை கைது செய்யக்கோரி மக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே காரில் சென்றவர்களை வழிமறித்து தாக்கி, வழிப்பறி செய்த மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பூங்குடி பகுதியை சேர்ந்த செந்தில்குமார், சீனிவாசன் ஆகியோர் புதுக்கோட்டை - அண்டக்குளம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல், காட்டுப்பகுதிக்குள் இழுத்து சென்று கட்டுப்போட்டுள்ளனர். பின்னர், 12 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு, செந்தில்குமாரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி உள்ளதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி - தஞ்சை இணைப்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day