பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 64ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்கள் கல்லூரி மாணவர்களா? அல்லது வெளி ஆட்களா? என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல், கல்லூரி வளாகத்தில் போதை பொருள் புழக்கம் ஏதும் இருந்ததா?, அதனால் இந்த சம்பவம் நடந்துள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day