பட்டியலின இளைஞரை இழிவாக பேசிய திமுக நிர்வாகி

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் பட்டியலின இளைஞரை திமுக நிர்வாகி சாதி ரீதியாக இழிவாக பேசும் வீடியோ வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விளம்பர திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமை சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கரிமேடு சந்தன மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் நடைபெற்ற அன்னதானத்திற்கு திமுக அவைத்தலைவர் ஒச்சுபாலு அளித்த ஆர்டரின் பெயரில் கேட்டரிங் உரிமையாளர் கார்த்திக், பணியாளர்களை வைத்து சமைத்து கொடுத்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர், பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பது தெரியாமல் கோயிலுக்கு சமைக்க ஆர்டர் கொடுத்துவிட்டேன் என இழிவாக பேசிய திமுக நிர்வாகி ஒச்சுபாலு, சமையலுக்கான சம்பளம் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை தராமல் மிரட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கேட்டரிங் உரிமையாளர் கார்த்திக், திமுக நிர்வாகி ஒச்சுபாலுவிடம் கெஞ்சி பணம் கேட்டும் தரமறுப்பதாகவும், இதனால் பணியாளர்களுக்கு ஊதியம் தரமுடியாமல் தவிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், திமுக நிர்வாகி ஒச்சுபாலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டரிங் உரிமையாளர் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.


Night
Day