சிலை கடத்தல் ஆவணங்கள் மாயம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


375 சிலைகள் திருடப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்தும் வெளிநாட்டு மியூசியத்திற்கு சென்றது எப்படி? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

சிலை கடத்தல் ஆவணங்கள் அழிக்கப்பட்டது எப்படி? - 38 காவல் நிலையங்களுக்கும் ஒரே நேரத்தில் தீ விபத்து ஏதும் ஏற்பட்டு கோப்புகள் அழிந்துவிட்டனவா? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் விளக்கவில்லை எனில் தலைமை செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்றும் காட்டமாக எச்சரித்தனர்.

41 கோப்புகள் காணாமல்போனது குறித்து உரிய விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஒரு கால அவகாசம் அளிப்பதாகவும், இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என எச்சரித்து வழக்கை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Night
Day