பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலி - சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார். வரும் காலங்களிலாவது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படாமல் தடுத்து, ஏழை எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி உள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிதம்பராபுரத்தை சேர்ந்த மாரியப்பன், முத்து முருகன் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்படுகின்ற பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்படுவதும், அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாகியிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்றும்,  திமுக தலைமையிலான அரசு பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்ப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

மேலும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அப்பாவி தொழிலாளர்களின் உயிர்கள் பறிபோவதுபற்றி எந்த கவலையும் படுவதில்லை என்றும், மாறாக, உயிரிழப்பு ஏற்பட்டவுடன் அதற்கு இழப்பீடு கொடுத்து விட்டால் மட்டும் போதும் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பட்டாசு ஆலைகளில் சுமார் 39க்கும் மேற்பட்ட வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 112க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிப்பதாக கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

திமுக தலைமையிலான ஆட்சியில் பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது என்றும், பட்டாசு தொழில் நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கின்றனவா? என்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனவும் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

மாவட்ட ஆட்சியர்கள் முறையாக ஆய்வுகளை மேற்கொள்ளாத அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர செய்து இருந்தால் இதுபோன்று தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு உயிர்களை இழந்து இருக்க மாட்டோம் என்று புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக்கொண்டது முதல் எல்லாவற்றிலும் அலட்சியப்போக்கினை கடைபிடிப்பதாலும், மக்களை மறந்து சுயநலப்போக்கோடு செயல்படுவதாலும் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கடும் பாதிப்படைந்து வருகிறார்கள் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

எனவே திமுக தலைமையிலான அரசு எஞ்சியிருக்கும் காலத்திலாவது, தமிழக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன்வர வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.  

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளவதாகவும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான அரசு உடனடியாக அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவை நியமித்து தமிழகத்தில் உள்ள அனைத்து பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு, வரும் காலங்களிலாவது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படாமல் தடுத்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய சாமானிய தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day