இடைநிலை ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எழும்பூரில் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009 மே 31ம் தேதி நியமிக்கப்பட்ட அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்றும் திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் விளம்பர அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் 2-வது நாளாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து முதன்மை கல்வி அலுவலகம் வரை இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகம் முழுவதும் தங்கள் போராட்டம் தீவிரமாகும் என்றும்  ஊதிய முரண்பாடு பிரச்சனை தீரும் வரை போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை குண்டக்கட்டயாக கைது செய்து வருகின்றனர். அப்போது, கைது செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்கள் போலீஸ் அராஜகம் ஒழிக என்று முழக்கமிட்டனர். 


Night
Day